தடியடி பிரச்னை… கேரளாவில் கட்சிகள் மாறி, மாறி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்:
யார் காரணம்… யார் காரணம் என்று சபரிமலை கோயில் விவகாரம் குறித்து கேரளாவில் கட்சிகளுக்குள் முட்டல், மோதல் எழுந்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் வன்முறையாக மாறியதற்கு யார் காரணம் என கேரள அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து மோதல் துவங்கி உள்ளன. அனைத்து கட்சிகளும் மாறி மாறி குற்றம் சுமத்த துவங்கி உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக இறு நடை திறக்கப்பட்டது. முன்னதாக சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததால் பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முயன்றனர். அவர்களை போராட்டக்காரர்கள் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தினர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில், காங்., கட்சியினர் யாரையும் தாக்கவில்லை. பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தான் போராட்டம் நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டனர் என கேரள காங் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டி உள்ளனர்.

சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கு ஆளும் இடதுசாரி கட்சி தான் முழு பொறுப்பு. இந்த துரதிருஷ்டவசமான சூழலுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. பா.ஜ., தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என பா.ஜ., தலைவர் எ.எஸ்.குமார் தெரிவித்துள்ளார்.
இப்படி இந்த விவகாரத்தில் கட்சிகளுக்குள் முட்டல், மோதல் எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!