தடுத்த மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பீகாரில் அதிர்ச்சி

அத்துமீறி விடுதிக்குள் நுழைந்த குண்டர்கள், தங்களைத் தடுத்த மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் சவுபால் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள், அந்த பகுதியில் வசிக்கும் ரவுடிகள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். இதையறிந்து அங்கு வந்த பள்ளி மாணவர்கள் அவர்களை தடுத்தனர்.

அவர்களை மீறி உள்ளே சென்று மாணவிகளிடம் ரவுடிகள் அத்துமீறி நடக்க முயற்சித்தனர். தங்களை பாதுகாத்து கொள்ள அந்த மாணவிகள், ரவுடிகளை அடிக்க துவங்கினர். இதனால், அங்கிருந்து தப்பியோடிய ரவுடிகள், பின்னர் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து மாணவிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 34 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing is caring!