தடை… இடைக்கால தடை… அரசு வக்கீல்கள் நியமிக்க தடை

மதுரை:
தடை… இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதற்காக என்று தெரியுங்களா!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், புதியதாக அரசு வக்கீல்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம் இல்லாத பலர் அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், புதியதாக அரசு வக்கீல்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்தது.

அரசு வக்கீல்கள் நியமனம் குறித்த ஆவணங்களை டிச.19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!