தடை… இடைக்கால தடை போட்டு குட்டு வைத்த ஐகோர்ட்

சென்னை:
போட்டுச்சு தடை… ஐகோர்ட் போட்டுச்சு செம தடை என்று மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எதற்கு தெரியுங்களா?

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், கோர்ட் உத்தரவை மீறும் வகையில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகளை காப்பாற்றும் நோக்கில் உத்தரவு உள்ளதாக கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு ஒரே நாளில் மாற்றிய நிலையில், ஐகோர்ட் உத்தரவுகளை பின்பற்றாதது ஏன்? ஐகோர்ட் உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசின் உத்தரவு ஒரு நிமிடம் கூட அமலில் இருக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி, தமிழக அரசு, டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பொன். மாணிக்கவேல் பொறுப்பேற்ற உடன்தான் கடத்தப்பட்ட பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!