தடை… தடை… அரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை

புதுடில்லி:
தடை… தடை… அரசு அலுவலங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், புகையிலை பொருட்களை எடுத்து வருவதற்கும், பயன்படுத்துவதற்கும், மத்திய அரசு தடை விதித்துள்ளது.

டில்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள நிர்மாண் பவனில், புகையிலை பொருட்கள் எடுத்து வருவதற்கும், அவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் புகையிலை பயன்பாட்டுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு அலுவலகங்களில், ‘பான் மசாலா’ மற்றும், ‘குட்கா’ போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கு, உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், சுற்றுப்புறமும் அசுத்தமாகிறது. இதனால், மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

எனவே அலுவலகங்களை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பராமரிக்க, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறினால் 200 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். இதுகுறித்து, விழிப்புணர்வு விளம்பர பலகைகளை, அலுவலக வளாகங்களில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!