தடை நீக்கம்… சிபிஎஸ்இ பள்ளிகள் பெற்ற இடைக்கால தடை நீக்கம்

சென்னை:
தடை நீக்கம்… நீக்கம்… என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று கடந்த மார்ச் 2ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையில், அங்கீகார சான்றிதழ் பெறாத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.

அங்கீகாரம் இன்றி இயங்கினால் நாள் ஒன்றுக்கு10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் வழக்கு தொடர்ந்து இடைக்காலத்தடை பெற்றன.

இந்த இடைக் கால தடையை நீக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசாணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யமுடியவில்லை, ஆவணங்களை கேட்டுப் பெற முடியவில்லை என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத்தடையை நீக்குவதாகவும், சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!