தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது… கோர்ட் அதிரடி உயர்வு

தஞ்சை:
வழங்கக் கூடாது… வழங்கக் கூடாது… தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்தது. தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள், இருக்கைகள் ஆகியவை அகற்றப்பட்டதையும், நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்பதையும் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!