தனியார் நிறுவன லாக்கர்களில் இருந்து ரூ.25 கோடி பறிமுதல்

புதுடில்லி:
தனியார் நிறுவன லாக்கர்களின் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டில்லி சாந்தினி சவுக் உட்பட பல பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் உள்ள 100 லாக்கர்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.25 கோடியை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை டில்லியில் 8 இடங்களில் நடந்தது.

ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் தான் தனியார் நிறுவனங்களில் உள்ள லாக்கர்களை பயன்படுத்தியதும், இந்த பணம், புகையிலை, கெமிக்கல் வர்த்தகர்கள் மற்றும் உலர் பழங்கள் டீலர்களுக்கு சொந்தமானது என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள், ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், சர்வதேச தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்தன. ஹவாலா மோசடியை குறிவைத்து, அதிகாரிகள் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது இந்த ஆண்டில், இது மூன்றாவது சம்பவமாகும்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், டில்லி மற்றும் மும்பையில் சோதனை நடத்தி ரூ.29 லட்சம் பறிமுதல் செய்தனர். ஜனவரியில் தனியார் நிறுவனத்தில் லாக்கர் ஒன்றில் சோதனை நடத்தி ரூ.40 கோடியை பறிமுதல் செய்திருந்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!