தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கால்வாய் ஒன்றில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், மாண்டியாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று காலை பாண்டவபுரம் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த போருந்து பாண்டவபுரம் தாலுகா கனகநமராடி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த விஸ்வேஷ்வரய்யா கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் பேருந்து முற்றிலும் கால்வாய் நீரில் மூழ்கியுள்ளது.

பேருந்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பள்ளிச்சிறார்கள் அதிகளவில் இருந்தனர். விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 25 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

Sharing is caring!