தனியார் வாகனப்பாவனை நிறுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் டில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் வாகனப்பாவனை நிறுத்தப்படவுள்ளது.

அண்மைக் காலமாக காற்று மாசு அதிகரித்து வருவதுடன், உயர்மட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என சிரேஷ்ட சுற்றுச்சூழல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

டில்லி உட்பட்ட இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நச்சுக்காற்று பரவலாக காற்றுடன் கலந்து வருகின்றது.

அறுவடை மிகுதிகளுக்கு விவசாயிகள் தீ வைப்பதனால் வௌியேறும் கரியமில வாயுவும் அதிகரித்த வாகனப் போக்குவரத்தினால் வௌியேறும் புகையும் இதற்குக் காரணமாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, காற்று அதிகமாக மாசடைவதற்குக் காரணமான அறுவடை மிகுதிகளுக்குத் தீ வைக்கும் செயற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில அரசு தடை செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!