தனியார் விடுதிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்… கிடுக்கிப்பிடி ஆரம்பம்

சென்னை:
வழிகாட்டு நெறிமுறைகள்… நெறிமுறைகள் என்று தனியார் விடுதிகளுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது.

தனியார் விடுதிகள் தொடர்பாக சென்னை கலெக்டர் சண்முகசுந்தரம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இருபாலர் விடுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தனித்தனி அறைகள் அமைக்கப்பட வேண்டும்.

பெண்கள் விடுதியாக இருந்தால், காப்பாளர்களாக பெண்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். சென்னையில் பதிவு செய்யாத விடுதிகள் டிச.,31க்குள் பதிவு செய்ய வேண்டும். ஜன.,1 முதல் பதிவு செய்யாத விடுதிகளில், பெண்கள், குழந்தைகள் தங்க வேண்டாம்.

விடுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருந்தால், ஒவ்வொரு வாசலுக்கும் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும். அதிகாரிகளால், ஒப்புதல் தரப்பட்ட கட்டடங்களில் மட்டும் தான் விடுதிகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!