தனிவழி பயணத்துக்கு நிறைவேற்றுக்குழு பச்சைக்கொடி!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதற்கு முன்னணியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

முன்னணியின் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், பொதுஜன ஐக்கிய முன்னணி, தேச விமுக்தி ஜனதா கட்சி, இலங்கை மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
சுமார் ஒருமணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலேயே அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதற்கு விரும்பினால் அதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். இறுதியில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Sharing is caring!