தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பன்றிக்காய்ச்சலால் கோவை மற்றும் திருச்சியில் 2 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பரவி வரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த்தாக்கம் காரணமாக 4,500-இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தினால் இந்த நோய்த்தாக்கம் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!