தமிழகம் முழுவதும் பரவலாக விடிய… விடிய… மழை…!

சென்னை:
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை உட்பட, எட்டு கடலோர மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகடலேராப்பகுதி, பொன்னேரி, எண்ணூர், திருவெற்றியூர், பெரியபாளையம், கும்மிடிபூண்டி ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரபகுதிகள், மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

திருவாரூர் மவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!