தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி

சென்னை:
தமிழகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் இன்று (18ம் தேதி) அதிகாலை முதல் நாளை 12.30 மணி வரை 44 மணி நேரத்துக்கு பக்தர்கள் தொடர் தரிசனம் செய்ய உள்ளனர்.

இதேபோல் தமிழகத்தின் திருப்பதி என்று வர்ணிக்கப்படும் ஸ்ரீரங்கம் கோயிலிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!