தமிழக மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

தமிழக மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் இவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 8 பேரையும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த 16 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மீனவர்களின் படகுகள் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 24 வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் படகின் உரிமையாளரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Sharing is caring!