தமிழாசிரியர்கள் விபரம்… அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு
சென்னை:
மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்களின் விபரம் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மொழிசிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் மொழி தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்த விசாரணையின் போது தமிழ் மொழி தேர்வுக்கு எத்தனை மாணவர்கள் விலக்கு கோரியுள்ளனர். 10ம் வகுப்பில் தமிழ் முதல் தாள் படித்த மாணவர்கள் எத்தனை பேர் எனவும், எத்தனை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. மற்றும் விலக்கு மறுக்கப்பட்டது.
மொழிசிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்களின் விபரம் ஆகியவற்றை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி