தமிழிசையை நீக்கினால் பாஜ வளர்ச்சி பெறும்… சர்ச்சையை கிளப்பிய நடிகை காயத்ரி ரகுராம்

சென்னை:
தமிழிசையை நீக்கினால்தான் பாஜ வளர்ச்சி பெறும் என்று கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 மூலம் பிரபலமானவர் நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம். நிகழ்ச்சியின் போது கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

இதனால் அவர் தன்னை விமர்சித்தவர்களுடன் டிவிட்டரில் கடுமையாக போராடினார். இந்த வார்த்தை யுத்தம் பல நாட்கள் நீடித்தது. சமீபத்தில் குடி போதையில் கார் ஓட்டி போலீசிடம் மாட்டிக்கொண்டார் என செய்திகள் பரவியது. ஆனால் அவரோ குடிக்கவே இல்லை என மறுத்து வந்தார்.

மேலும் பா.ஜ. மீது குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜனை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால் பாஜக வளர்ச்சி பெறும் என கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!