தயார்… அனைத்தும் தயார் நிலையில் உள்ளது… லோக்சபா தேர்தலுக்கு

திருவண்ணாமலை:
லோக்சபா தேர்தலுக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். பின், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதசாகு, நிருபர்களிடம் கூறியதாவது:

லோக்சபா தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில், வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில், தமிழகத்தில், 11 லட்சத்து, 24 ஆயிரம் பேரிடமிருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதில், 9 லட்சம் பேர், புது வாக்காளர்களாக விண்ணப்பித்துள்ளனர். ஜன., 4ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். லோக்சபா தேர்தலுக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!