தயார்… நான் தயார்… சவால் விட்டுள்ள புதுச்சேரி துணை நிலை கவர்னர்

புதுச்சேரி:
தயார்… தயார்… என்று சவால் விட்டுள்ளார் புதுச்சேரி துணை நிலை கவர்னர். என்ன விஷயம் தெரியுங்களா?

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக உள்ளதாக புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த சோதனைக்கு முதல்வர் நாராயணசாமி தயாராக உள்ளாரா? இருவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தி முடிவை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். முதல்வர் தொடர்ந்து என் மீது பொய் புகார்களை கூறி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!