தற்கொலைக்கு முயன்ற இந்திய பெண்ணை மீட்டனர் போலீசார்

ஷார்ஜா:
தற்கொலைக்கு முயன்ற இந்திய பெண்ணை போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜாவை சேர்ந்த, இளம் இந்திய பெண், சமூக வலைதளம் ஒன்றில், தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன். அதை, சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்புகிறேன்’ என கூறியிருந்தார். அப்பெண் ஷார்ஜாவில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், அவரது வீட்டுக்கு சென்று மின் விசிறியில் துாக்கு மாட்ட முயன்ற அந்தப் பெண்ணை காப்பாற்றினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!