தற்கொலைப்படை தாக்குதல்; 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜலலாபாத்தில் கிராமப்புற மேம்பாடு அமைச்சக அலுவலகத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாயினர்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலுவலக நேரம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் அரசு ஊழியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இருவாரங்களில் ஆப்கனில் நடத்தப்பட்ட 3வது பெரிய தற்கொலைப்படை தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!