தலிபான்கள் தாக்குதலில் 8 போலீசார் பலியான அதிர்ச்சி

காபூல்:
தலிபான்கள் தாக்குதலில் 8 போலீசார் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 போலீசார் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் பயங்கரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்சை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சமீபகாலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!