தலைமை காவலர் தெரியாத தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

இந்திய தலைநகர் டெல்லியில் தலைமை காவலர் ராம் அவ்தார் இனம் தெரியாத தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

தகவலறிந்து வந்த காவற்துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவற்துறை விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் தலைமை காவலர் ராம் அவ்தார் இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தலைநகர் டெல்லியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!