தலையை சுற்றும்… நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏ., ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து

பெங்களூரு:
இவர்தான் பணக்கார எம்எல்ஏ… நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏன்னா… பார்த்துக் கொள்ளுங்கள்.

கர்நாடகாவில் அமைச்சராக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாகராஜ் நாட்டிலேயே மிகவும் பணக்கார எம்.எல்.ஏ., என்ற பெருமையைப் பெற்றுள்ளார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவரது சொத்தின் மதிப்பு 1,015 கோடி ரூபாய்.

கர்நாடக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் இரண்டு அமைச்சர்கள் நீக்கப்பட்டு காங்கிரசை சேர்ந்த எட்டு பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். பெங்களூரு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒசக்கோட் தொகுதி எம்.எல்.ஏ.,வான நாகராஜ் (66) அமைச்சராகப் பதவியேற்றார்.

இவருக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தற்போது நாட்டின் மிகப் பெரிய பணக்கார எம்.எல்.ஏ.,வாக உள்ள அவரது சொத்து மதிப்பு 1,015 கோடி ரூபாய். எட்டாம் வகுப்பு படித்துள்ள நாகராஜுக்கு 437 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், 578 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!