தலைவன் அல்ல… தனி மனிதன்… ஆதரவாளர்களுக்கு அழகிரி நன்றி

மதுரை:
தலைவன் அல்ல… தனி மனிதன்… எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று அழகிரி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நான்… ஒரு தலைவன் அல்ல… ஒரு மேடை பேச்சாளன் அல்ல…
ஒரு நடிகன் அல்ல… தனி மனிதனாய்… தொண்டனாகிய என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதியின் 30வது நாள் நினைவு பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீதுபாசங்கொண்டு அலைகடலென வந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!