தள்ளுமுள்ளு… விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

கவுகாத்தி:
தள்ளு முள்ளு… தள்ளு முள்ளு நடந்துள்ளது விமான நிலையத்தில். எங்கு தெரியுங்களா?

என்.ஆர்.சி.க்கு எதிராக பிரசாரம் செய்ய அசாம் வந்த மம்தா கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் விமான நிலையத்திலேயே சிறைபிடிக்கப்பட்டனர். அசாமில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் 40 லட்சம் பேர் நாட்டை வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இதற்கு மேற்குவங்க திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இந்நிலையில் மம்தா கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. உள்பட 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 எம்.பி.க்கள் என்.ஆர்.சிக்கு எதிராக பிரசாரம் செய்ய அசாம் சென்றனர்.

அவர்கள் சில்சார் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கேயே சிறைபிடித்தனர். இதனால் விமான நிலையத்தில் போலீசாருக்கும், மம்தா கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!