தவறான குற்றச்சாட்டு… அமெரிக்க அதிபர் பற்றி அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்:
தவறான குற்றச்சாட்டு… 7546 குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற இந்த 700 நாட்களில் அவர் 7546 தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிரம்ப் அதிபராக பதவியேற்ற முதல் 8 மாதங்களில், நாளொன்றுக்கு 5 பொய்கள் வீதம் 1,137 குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் இடைத்தேர்தல் நிகழ்ந்த சமயத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் வீதம் நாளொன்றுக்கு 39 என்ற வீதம் அதிகரித்து அவர் அன்றைய காலகட்டத்தில் மட்டும் 1,205 ஆதாரமற்ற / தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

The Fact Checker’s database என்ற நிறுவனம், டிரம்பின், அதிபர் தேர்தல் பிரசார உரை, அவரது ஆதரவாளர்களிடையே நிகழ்த்திய உரைகள் என பல்வேறு கோணங்களில் அவரது உரை குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அவரது ஒவ்வொரு உரையிலும், 35 முதல் 45 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அப்போதே இருந்துள்ளது. அதிபரான பிறகு, உள்ளூர் ஊடகங்களிலும் அவர் அதே நிலையையே தொடர்ந்து பின்பற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018, டிசம்பர் 20ம் தேதியுடன், டிரம்ப் அதிபராக பதவியேற்று 700 நாட்கள் நிறைவடைந்தநிலையில், அவர் இதுவரை 7,546 தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!