தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரித்தானியாவிற்கு சொந்தமான உலகின் முன்னணி பாதுகாப்பு நிறுவனம் அமைந்துள்ளது.

இந்நிறுவனத்திற்கு வௌியே கார்க்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் பின்னர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் ஆப்கன் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த பாதுகாப்பு நிறுவனம் காபூலிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்திற்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!