தாண்டியது… பணப்புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது

புதுடில்லி:
தாண்டியது… தாண்டியது… பணப்புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.

முன்னர் புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என, 2016 நவம்பர், 8 ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் திருப்பி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2016ம் ஆண்டு நவ.8-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு முன்பு பண பழக்கம் ரூ.17.97 லட்சம் கோடியாக இருந்தது.

தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் 2018-ம்ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரையிலான இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் ரூ. 20.15 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!