தாய்லாந்தில் இந்திய வாலிபர் ஒருவர் தாய்லாந்து பெண்ணிடம் அத்துமீறியதால் பெண் கொடுத்த தண்டனை

தாய்லாந்தில் இந்திய வாலிபர் ஒருவர் தாய்லாந்து பெண்ணிடம் அத்துமீறியதால் அந்த பெண், வாலிபரின் உதட்டைக் கடித்து துப்பிவிட்டார்.

இந்தியாவை சேர்ந்த சஷாங் அகர்வால் என்ற நபர் தாய்லாந்துக்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளார். அங்கே சென்ற சஷாங் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். பின் போதையில் அவர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சஷாங்கிற்கு அருகே ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காத சஷாங், அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், சஷாங்கிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அந்த பெண், ஷாங்கின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். வலி தாங்க முடியாத சஷாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sharing is caring!