தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்பதில் சிக்கல்

பாங்காங்:
மழை நீர் அதிகளவில் தேங்கி இருப்பதால் குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் இதுவரை 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 9 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவன் உடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

இரண்டாம் கட்டமாக சிறுவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. குகைக்குள் செல்லும் பாதை குறுகலாக உள்ளதாலும், குகைக்குள் பல அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி இருப்பதாலும் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து 4வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குகை அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மீட்பு பணியில் சிக்கல் எழுந்துள்ளது. புதிதாக மழை பெய்வதால் மழைநீர் இல்லாத பகுதிகளிலும் வெள்ளம் சூழ வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கும் குறுகலான குகைக்கு இருளில் நீந்திச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் சிறுவர்களை மீட்கும் பணியில் சிக்கல் எழுந்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!