தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்து குகைக்குள் சிக்குண்டவர்களில் 4 சிறுவர்கள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 சிறுவர்களையும் அவர்களது பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

குகையிலுள்ள வௌ்ள நீரின் அளவு அதிகரிக்கும் அச்சம் நிலவுவதால், மீட்புப் படையினர் பயங்கரமான நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகைக்குள் சென்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் குகைக்குள் சிக்குண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் நேற்று வௌிநாடுகளைச் சேர்ந்த சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனையடுத்து, 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Sharing is caring!