தாய் மொழியை கட்டாயமாக கற்பிக்க சட்டம்… துணை ஜனாதிபதி வலியுறுத்தல்

புதுடில்லி:
தாய்மொழியை கட்டாயமாக கற்பிப்பதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்… வேண்டும்… என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநில அரசுகளும், அந்தந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தங்களது தாய்மொழியை கட்டாயமாக கற்பிப்பதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது: கலாச்சாரம், மதிப்பு, பாரம்பரியத்தை உள்ளடக்கியதாக தாய்மொழி திகழ்கிறது. நாம், பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். மூத்தவர்களையும், ஆசிரியர்களையும் மதிப்பவர்கள். அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுபவர்கள்.

இயற்கைக்கு மரியாதை அளிப்பது ஒவ்வொரு இந்தியனின் டிஎன்ஏவில் உள்ளது. ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்பிக்கலாம். ஆனால், தாய்மொழியை புறக்கணிக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!