திமிங்கில வேட்டை நடத்துவோம்… ஜப்பான் அறிவித்தது!!!

ஜப்பான்:
மீண்டும் திமிங்கில வேட்டை… திமிங்கில வேட்டை நடத்துவோம் என்று ஜப்பான் அறிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி பணிகளுக்கு என்ற பெயரில் அண்டார்டிக், வடமேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் அவற்றை ஆய்வுக்குப் பயன்படுத்தாமல் விடுதிகளில் உணவாகப் பரிமாறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் திமிங்கலங்களைப் பாதுகாப்பது குறித்து  சர்வதேச திமிங்கலப் பிடிப்பு ஆணையம் வணிக ரீதியில் திமிங்கலங்களைப் பிடிப்பதை 1986-ம் ஆண்டு தடை செய்தது. இந்த ஆணையத்தில் ஜப்பானும் உறுப்பினர். இந்த நிலையில் இந்த ஆணையத்திலிருந்து ஜப்பான் வெளியேறுவதாக  அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வணிக ரீதியாக திமிங்கல வேட்டையில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது. ஆனால் ஜப்பான் கடல் பகுதியில் மட்டும் திமிங்கிலங்களை பிடிக்கப் போவதாகவும், திமிங்கில இறைச்சி தங்கள் கலாச்சாரத்துடன் தொடர்புடையது என்றும் ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பிரிட்டன் உள்ளிட்ட  நாடுகள் தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!