திமுக தலைவர் உடல்நலம் தேற வேண்டி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு

திருச்சி:
கட்சி தலைவர் பொறுப்பேற்று பொன்விழா காணும் நிலையில் உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வரவேண்டும் என்பதற்காக திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடுகளை ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் நடத்தினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு பற்றிய செய்திகள்தான் பரவி வருகிறது. வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்ட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ரத்த அழுத்த குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது’ என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது மகனும் கட்சி செயல்தலைவருமான ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல கட்சி தலைவர்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில் தமிழுக்கு தொண்டாற்றிய கருணாநிதி உடல்நிலை குணமடைய வேண்டி திருச்சி குமரன் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் அதன் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் தியானத்தில் அமர்ந்து வேண்டுதல் செய்து வருகிறார்.

முதுபெரும் தலைவரான கருணாநிதி உடல் நலம் தேறி வர வேண்டும் என்பதற்காக உண்ணாநோன்பும் மேற்கொண்டார். மேலும் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடத்தினார். அரசியல், கட்சி என்ற நிலைப்பாடுகளை தாண்டி ஏராளமான மக்களும் கருணாநிதி குணமடைய வேண்டி இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!