திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு… மருத்துவமனை அறிக்கை

சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது அவரது உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதுதவிர கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து புகழ் பெற்ற டாக்டர் முகமது ரேலா வரவழைக்கப்பட்டார். அவரும் காவேரி ஆஸ்பத்திரி டாக்டர் குழுவினருடன் இணைந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கருணாநிதியின் உடல்நிலையில் நேற்று மதியம் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் காவேரி மருத்துவமனை அவருடைய உடல்நிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. 24 மணி நேரத்தில் சிகிச்சைக்கு கருணாநிதி எப்படி ஒத்துழைக்கிறார் என்பதை பொறுத்தே கணிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!