திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து

சென்னை:
கருணாநிதி பாதையில் ஸ்டாலின் பயணித்து கட்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கருணாநிதி பாதையில் ஸ்டாலின் பயணித்து கட்சியை சீரும், சிறப்புமாக நடத்த வேண்டும். திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கும் தேமுதிக சார்பில் எனது வாழ்த்துக்கள் என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணுவும், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!