தியாகிகள் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை… அமிதாப் அறிவிப்பு

மும்பை:
தியாகிகள் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடி நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளேன் என்று நடிகர் அமிதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் நிருபர்களிடம் நடிகர் அமிதாப் கூறியதாவது: நாட்டுக்காக போரில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு, ஏதாவது செய்ய விரும்பினேன்.

அரசு நடைமுறைப்படி, நன்கொடை தொகையில், 60 சதவீதம் மனைவிக்கும், 20 சதவீதம் தந்தைக்கும், 20 சதவீதம் தாய்க்கும் வழங்கப்பட வேண்டும். அதன்படி, 44 தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்க, ஒரு கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்துள்ளேன்.

மேலும், குறைந்த கடன் தொகைகளை திரும்ப செலுத்த முடியாமல், விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். ஏற்கனவே, 40 – 50 விவசாயிகளின் கடன்களை அடைத்துள்ளேன். இம்முறை 200 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைக்க, 1.50 கோடி ரூபாய் வழங்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

 

Sharing is caring!