திருக்குறள் மீது உறுதியேற்று தனது பதவியை ஏற்றுக்கொண்ட முதலாவது தமிழ் கனடிய மாநிலாளுமன்ற உறுப்பினர்
திருக்குறள் மீது உறுதியேற்று தனது பதவியை ஏற்றுக்கொண்ட முதலாவது தமிழ் கனடிய மாநிலாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம்.
திருக்குரலை முன்னிறுத்தி பதவியேற்றார் விஜய் தணிகாசலம்
கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.
தாங்கள் விரும்பிய புனித நூலை முதன்மைப்படுத்தி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வாய்பபைப் பயன்படுத்தி தமிழ் மறையாம் திருக்குறளை முதன்மைப்படுத்தியே அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பெரும் சவால் நிறைந்த மேற்கத்திய அரசியல் அரங்கில் தனது உரிமைகளை சரிவரப்பயன்படுத்தி அவர் தனது பதவிப்பிரமாணத்தை மேற்கொண்டதையிட்டு பலரும் மகிழ்ச்சியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S