திருடிய லோடு ஆட்டோவை தள்ளிவிட போலீசாரையே அழைத்த திருடன் சிக்கினான்

சென்னை:
திருடிய லோடு ஆட்டோ நின்று விட்டதால் அதை தள்ளிவிட போலீசாரையே கூப்பிட்டு சிக்கி கொண்டுள்ளான் திருடன்.

சென்னை புழல் சிறையில் காவலர்களாக பணியாற்றுபவர்கள் செல்வமாணிக்கம், மதன். இவர்கள் இருவரும் சிறையில் தங்களது பணியை முடித்து விட்டு அருகில் உள்ள டீக்கடையில் மப்டியில் நின்று டீ குடித்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது அதன் அருகே லோடு ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இருந்து இறங்கி வந்த நபர் இவர்களை போலீசார் என்று தெரியாமல் லோடு ஆட்டோ ஸ்டார்ட் ஆகவில்லை. அதை தள்ளிவிட கூறி உதவி கேட்டுள்ளார். அப்பொழுது லோடு ஆட்டோவை தள்ளி விட சென்ற காவலர்கள் லோடு ஆட்டோவின் கதவுகளில் உள்ள கண்ணாடி உடைந்திருப்பது கண்டும், சாவி இல்லாதது கண்டும் சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து ஒரு காவலர் லோடு ஆட்டோவில் வந்தவருடன் பேச்சு கொடுத்துக் கொண்டே ஆட்டோவை தள்ளுவது போல நடித்துக் கொண்டிருந்தார். இன்னொரு காவலர் உடன் தனது செல்போனை எடுத்து ஆட்டோவின் பின்னால் இருந்த அந்த ஆட்டோ உரிமையாளரின் நம்பரை தொடர்பு கொண்டு ஆட்டோ குறித்து விசாரிக்க துவங்கினர்.

அப்போது அந்த ஆட்டோவின் உரிமையாளர் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ரஹ்மான் என்பதும், அவரது ஆட்டோ முந்தைய நாள் மாலை ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது திருடு போனதும் தெரியவந்தது. இதையடுத்து செல்வமாணிக்கம், மதன் ஆகியோர் லோடு ஆட்டோவை ஓட்டி வந்தவரைப் பிடித்து விசாரித்தில் அது திருட்டு ஆட்டோ என்பதும் உறுதியானது.

மேலும் அவன் பெரிய பாளையத்தை சேர்ந்த பாலாஜி என்ற பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!