திருவாரூரில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

சென்னை:
அமலுக்கு வந்தது… திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு, ஜன., 28ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு கூறுகையில், ‘நடத்தை விதிகள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய – மாநில அரசுகளுக்கும் பொருந்தும். திருவாரூர் மாவட்டம், கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளானது.

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஏற்கனவே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்த, தடை இல்லை’ என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!