திருவாரூர் இடைத் தேர்தல்…திமுகவுக்கு மதிமுக ஆதரவு

சென்னை:
திருவாரூர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளித்துள்ளது.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

திருவாரூர் இடைத்தேர்தலில், திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும். திமுக வெற்றி பெற பாடுபடுவோம். திமுக வேட்பாளர் வெற்றி பெற பிரசாரம் செய்வேன் என்றார். திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!