திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல்… கட்சிகள் மும்முரம்

சென்னை:
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்பு அதிரடியாக வெளியாகி உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகள் மும்முரம் அடைந்துள்ளன.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தி.மு.க., வேட்பாளர் நேர்காணல் ஜனவரி 4ம் தேதி நடக்க உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் நாளை 2ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 3ம் தேதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

விண்ணப்பத்தை ரூ.ஆயிரம் செலுத்தி பெறலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.25 ஆயிரம் என தி.மு.க., அறிவித்துள்ளது. இதேபோல் வரும் 4ம் தேதி அ.தி.மு.க., வேட்பாளர் பரிசீலனை நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. திருவாரூரில் போட்டியிட விரும்புவோர் நாளை 2ம் தேதி முதல் 3 ம் தேதி வரை ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவம் பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜன.,3 ம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும் என அதிமுக தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!