திருவையாறில் மவுன அஞ்சலி ஊர்வலம்

திருவையாறு:
திருவையாறில் திமுக தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்துக்கு தி.மு.க. ஒன்றிய அவை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் மதியழகன், தி.மு.க. பேச்சாளர் ஆண்டவர் செல்வம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், சுகுணா, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் பூதலூரில் தி.மு.க. நிர்வாகி கலியமூர்த்தி தலைமையிலும், திருக்காட்டுப்பள்ளியில் நகர தி.மு.க. அவைத்தலைவர் சரவணன் தலைமையிலும், செங்கிப்பட்டியில் தி.மு.க. பிரமுகர் சரவணன் தலைமையிலும் மவுன ஊர்வலம் நடந்தது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!