திறமையான சிறுவனை இழக்க கூடாது… எம்பிக்கள் வலியுறுத்தல்

லண்டன்:
நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என்று எம்.பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். எதற்காக? என்ன விஷயம் தெரியுங்களா?

செஸ் போட்டியில் பல சாதனைகள் படைக்கும் இந்திய சிறுவனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என இங்கிலாந்து எம்.பி.,க்கள் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஜிதேந்திரா. இவரது மனைவி அஞ்சு சிங். இவர்களுக்கு ஸ்ரேயாஸ் ராயல் என்ற மகன் உள்ளனர். தன் மகன் 3 வயதாக இருக்கும்போது, பணி நிமித்தமாக இங்கிலாந்தில் குடியேறினர்.

தற்போது 9 வயதாகும் ஸ்ரேயாசுக்கு செஸ் போட்டியில் ஆர்வம் அதிகம். இங்கிலாந்து சார்பில் பல தொடர்களில் பங்கேற்றுள்ளார். சிறுவர்களுக்கான தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் உள்ள அவர் பிரிட்டன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வருகிறார்.

இவர்களின் விசாக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கியிருக்க ஜிதேந்திரா முயற்சி செய்து வருகிறார். ஆனால், விசா கட்டுப்பாடுகள் காரணமாக சில நடைமுறை சிக்கல் உள்ளது. ஸ்ரேயாசை தேசிய சொத்து எனக்கருதி தொடர்ந்து வசிக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் ரசேல் ரீவிஸ், மேத்யூ பென்னிகுக், இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு எழுதிய கடிதத்தில், ஸ்ரேயாசை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தால், திறமையாளரை இங்கிலாந்து இழந்து விடும்.

உலகின் திறமையானவர்கள், அறிவாளிகளை, இங்கு வாழவும், பணி செய்யவும் அனுமதிக்க வேண்டும். அரசின் கொள்கை காரணமாக இளம் சாதனையாளர் நாட்டை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை அனுமதிக்கக்கூடாது. இதில் தலையிட்டு, ஸ்ரேயாஸ் தொடர்ந்து இங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!