தீபாவளி நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை:
தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது ரயில்வே நிர்வாகம்.

தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம் – நெல்லை மற்றும் தாம்பரம் – கோவை வழித்தடங்களில் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு நவ.,3, 5ம் தேதிகளில் காலை 9.30 மணிக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு நவ.,4, 7 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோல் தாம்பரத்திலிருந்து கோவைக்கு நவ.,3, 5ம் தேதிகளில், காலை 7.45 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இத்தகவலை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!