தீபாவளி நெரிசலை தவிர்க்க 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்

சென்னை:
ஆறு இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீபாவளி நெரிசலை தவிர்க்கும விதமாக சென்னையில் இருந்து ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சை மற்றும் அதை தாண்டிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

கோயம்பேட்டில் இருந்து திருச்சி வேளாங்கண்ணி, மதுரை நெல்லை, செங்கோட்டை, பண்ருட்டி, விழுப்புரம், சேலம், கோவை, பெங்களூரு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படுகிறது.

பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் ஆரணி, ஆற்காடு வேலூர், தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பணிமனையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

மதுரவாயல் பறவழிச்சாலை, 100 அடி சாலையில் இருந்து வடபழனி நோக்கி செல்ல ஆம்னி பஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!