தீய்ந்த சப்பாத்தியை கொடுத்ததாக மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்

உத்திரபிரதேசம்:
தீய்ந்த சப்பாத்தியையா சாப்பிட கொடுக்கிற என்று மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார் ஒருவர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தீய்ந்த சப்பாத்தியை பரிமாறியதாகக் கூறி நபர் ஒருவர் மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமிய ஆண்கள் தங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடன் மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது அம்மத வழக்கமாக இருக்கும் நிலையில் இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் டில்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. இருப்பினும் இதை இன்னும் பலர் பின்பற்றுவதில்லை. இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலம், மஹோபா மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் தனது மனைவி தயார் செய்து கொடுத்த சப்பாத்தி தீய்ந்து விட்டதாக கூறி அவரிடம் சண்டையிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது மனைவிக்கு தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். தனது கணவன் சில்லரை காரணத்திற்காக தன்னிடம் முத்தலாக் கூறியதாகவும், வீட்டை விட்டு வெளியே செல்ல வற்புறுத்தி, சிகரெட்டை கொண்டு உடலில் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!