தீர்வு ஏற்படணுமா… அப்போ பேச்சு வார்த்தைதான் சரி… சொல்வது முதல்வர்

திருப்பதி:
தீர்வு… காவிரி பிரச்னைக்கு தீர்வு பேச்சுவார்த்தையால் மட்டுமே முடியும் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நிருபர்களிடம் முதல்வர் குமாரசாமி தெரிவித்ததாவது:

காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண தமிழக அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!